‘தளபதி 66’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Thalapathy 66 25-04-2022

Thalapathy 66, Vijay, Tamil Cinema 25th April 2022 : பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிகர் ஷாம் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலானது. அதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஷாம் நடிப்பதாக வெளியிட்ட போஸ்டரை பகிர்ந்து, தளபதி விஜய்யுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல் உண்மை என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 66, Vijay, Tamil Cinema 25th April 2022