சந்தானம் நடிக்கும் மும்மொழி படத்தின் நாயகி பற்றிய தகவல்!

சந்தானத்துடன் இணையும் நடிகையின் தகவல்

Santhanam, Tamil Cinema 26-Apr-2022: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து சந்தானம் முதல் முதலில் மும்மொழி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

Santhanam, Tamil Cinema 26-Apr-2022

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தாராள பிரபு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam, Tamil Cinema 26-Apr-2022

இப்படத்தில் சந்தானம் இதுவரை நடித்திராத புதிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Santhanam, Tamil Cinema 26-Apr-2022

இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ராகினி திவேதி நடிக்க இருப்பதாகவும் மற்றும் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாங்காக், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.