Trisha 26 April 2022
Trisha, Cook With Comali, Tamil Cinema 25- 04- 2022 : திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் 50 நாட்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப், மற்றும் சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

