சூர்யா சென்னை காவல் துறைக்கு செய்த உதவி! குவியும் பாராட்டுக்கள்

சூர்யா காவல்துறைக்கு செய்த உதவிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Suriya, Vaadivasal 26-April-2022: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ஏற்கனவே அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி அதன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் என்பது அறிந்ததே.

Suriya, Vaadivasal 26-April-2022

இந்நிலையில் தற்போது சென்னை காவல் துறையின் காவல் கரங்களுக்கு ‘வான்’ ஒன்றை வழங்கியுள்ளார். பிளாட்பாரங்களில் வசிக்கும் மற்றும் வீடற்று இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் உணவு உதவி செய்வதற்காக காவல்துறையின் காவல் கரங்களுக்கு சூர்யா இந்த வானை வழங்கியுள்ளார்.

Suriya, Vaadivasal 26-April-2022

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் பச்சை கொடியசைத்து இந்த வானை இயக்கி வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Suriya, Vaadivasal 26-April-2022

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suriya, Vaadivasal 26-April-2022