சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் கதை பற்றிய தகவல்
Kamal Haasan, Sivakarthikeyan 26-Apr-2022: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படம் ஒரு நாட்டுப்பற்று மிக்க படமாகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தான் இந்த படத்தின் கதை நகர்த்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அதுமட்டு மின்றி சிவகார்த்திகேயனின் முதல் பான் இந்திய திரைப்படமானது என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.