வெளிவந்த பிசாசு 2 படத்தின் டீசர் பற்றிய விபரம்
Vijay Sethupathi, Andrea Jeremiah, Pisasu 2, Tamil Cinema 25-Apr-2022: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். இவர் மாறுபட்ட கதை களங்களை எடுத்து மக்களிடம் சேர்ப்பதில் கவனம் கொண்டவர். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட பல வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் ஆவர்.

மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிசாசு 2 படத்தின் டீசர் இம்மாதம் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
