சினிமாவில் களம் புகும் சச்சின் மகள்!
Sara Tendulkar, Sachin Tendulkar, Tamil Cinema 25-Apr-2022: பொதுவாக இந்திய சினிமா துறையை பொறுத்தவரை பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறையில் கால் பதிப்பது வழக்கமானது. அந்தவகையில் தற்போது இந்திய முன்நாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மக்கள் சினிமாவில் களமிறங்க உள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு அர்ஜுன் டெண்டுல்கர் என்ற மகனும், சாரா டெண்டுல்கர் என்ற மகளும் உள்ளனர். மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தையை போலவே கிரிக்கெட் மீது உள்ள காதல் காரணமாக அவர் ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர் இன்னும் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா டெண்டுல்கருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தந்தையும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இதற்காக சாரா டெண்டுல்கர் நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் நடிப்பது உறுதியாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.