த்ரில்லர் கதையை மையப்படுத்தி ஜெய் நடிப்பில் உருவான படத்தின் டீசர் வெளிவந்துள்ளது
Jai, Sundar.c, Pattampoochi 25-Apr-2022: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘வீரபாண்டியபுரம்’ மற்றும் ‘குற்றம் குற்றமே’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது.

தற்போது இவர் ‘பட்டாம்பூச்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள நிலையில், இதில் சுந்தர்.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை ஹனி ரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் ‘அவ்னி டெலி மீடியா’ சார்பாக குஷ்பூ தயாரிக்கும் இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்க, நவநீத் சுந்தர் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் சுந்தர்.சி புலனாய்வு அதிகாரியாக நடிக்க, சைக்கோ கொலைகாரனாக ஜெய் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி யூடியூபில் 1.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பலரின் கவனத்தை பெற்று வருகிறது.