மீண்டும் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் பிரபல நடிகர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Sudha Kongara 25- 04 -2022

Sudha Kongara, Tamil Cinema, Soorarai Pottru 25th April 2022 : நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் சுதா கொங்கரா அறிவித்திருந்தநிலையில், தற்போது சூர்யாவின் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாகவும், நாயகியாக ராதிகா மதன் நடிக்க விருப்பதாகவும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sudha Kongara, Tamil Cinema 25th April 2022

’சூரரைப்போற்று’ படத்தை அடுத்து மீண்டும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணைந்து உள்ளனர். இத்திரைப்பத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யாவும் சிறப்பு காட்சியில் தோன்றலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Posted

in

by