Kaathuvaakula Rendu Kaadhal 25-04-2022
இரட்டை அர்த்த வசனங்கள் அதிகளவில்
Kaathuvaakula Rendu Kaadhal, Vijay Sethupathi, Nayanthara, Samantha 25th April 2022 : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதியுடன் சமந்தா ரூத் பிரபு, நயன்தாரா, எஸ்.ஸ்ரீசாந்த், கலா, பிரபு, லொள்ளு சபா மாறன் மற்றும் ரெடிங் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் வழமையான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஏ. ஸ்ரீகர் பிரசாத். விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இத்திரைப்படம் எதிர்வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சென்சார் வெளிவந்துள்ளது. அதன்படி படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் .
’யூஏ’ என்பது 12 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வழிநடத்தலின்பேரில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை அர்த்தகங்கள் உள்ள வசனங்கள் அதிகளவில் உள்ளதாலையே இவ்வாறு தணிக்கை கிடைத்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
