பிரபல நடிகருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டதாக குற்றச்சாட்டு! இஷா கோபிகர் குறிப்பிட்ட தகவல்

பிரபல நடிகருடன் அட்ஜெஸ்ட்மென்ட், இஷா கோபிகர் குற்றச்சாட்டு!

Isha Koppikar, Tamil Cinema 25-Apr-2022: தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகர் நடிகர் விஜய், அரவிந்த் சுவாமி மற்றும் பிரஷாந்த் உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Isha Koppikar, Tamil Cinema 25-Apr-2022

இவர் விஜய்யின் ‘நெஞ்சினிலே’ படத்திலும் அரவிந்த் சுவாமியுடன் ‘என் சுவாச காற்றே’ மற்றும் பிரஷாந்துடன் ஜோடி திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்ய கோரி வற்புறுத்தும் நிலைமை இங்கே அதிகமாக உள்ளது என்றும், நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபல நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டுமென்று அந்த படத்தின் தயாரிப்பாளர் வற்புறுத்தினார், ஆனால் நான் முடியாது என்று சொல்லி விட்டதால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்று பல இடங்களில் அட்ஜெஸ்ட் செய்ய மறுத்தமையினால் தான் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஷா கோபிகரின் இந்தக் குற்றச்சாட்டால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.