ரஜினி தவறவிட்ட படம் விஜய்யை வந்து சேர்ந்தது!
Rajinikanth, Vijay, Thalapathy 66, Thalapathy 67, Thalaivar 169, Tamil Cinema 25-Apr-2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவறிய திரைப்படம் பீஸ்ட்.

இதை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். முதலாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தளபதி 66 படத்தை தொடர்ந்து, விஜய் அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67-இல், நடிக்க இருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் தெருவிக்கப்படுகிறது. மேலும், இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் இப்படத்தின் கதையை, முதன் முதலில் ரஜினிக்கு கூறியுள்ளாராம் இயக்குனர் லோகேஷ். அந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தீடீரென சில காரணங்களால் இந்த கூட்டணி தொடர முடியாமல் போய்விட்டது.
இந்நிலையில், தற்போது ரஜினிக்கு கூறிய அந்த கதையை விஜய்க்கு ஏற்றது போல் மாற்றியமைத்து, இயக்கப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகார பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.