நடிகை மாளவிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகிறது!
Malavika, Tamil Cinema 25-Apr-2022
90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. இவர் ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் தனது ரசிகர்களை அவரது நடிப்பாலும், கவர்ச்சியாலும் ஈர்த்து வைத்திருந்த நடிகை மாளவிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.
திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குழந்தைகள், கணவர் என அவரது குடும்ப வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார்.
மேலும், சுந்தர். சி இயக்கத்தில் மீண்டும் தற்போது தமிழில் உருவாகி வரும் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுவுள்ளார் மாளவிகா.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தனது புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, தான் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.