சூர்யா பெற்றோருக்கு விடுத்த தாழ்மையான வேண்டுகோள்! வீடியோ வைரல்

மாணவர் சமுதாயம் பற்றிய சூர்யா பெற்றோருக்கு விடுத்த வேண்டுகோள்!

Suriya, Ameer Sultan, Vetrimaaran, Vaadivasal 23-Apr-2022

நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமின்றி பொது நலன் கருதியும் சில தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா பெற்றோர்களுக்கு விடுத்த வேண்டுகோள் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya, Ameer Sultan, Vetrimaaran, Vaadivasal 23-Apr-2022

அதில் சூர்யா கூறுவது, ‘ஒரு சிறந்த பள்ளி தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடம் என்பது பெரும் கட்டிடம் மட்டுமல்ல, அந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. தமிழ்நாடு அரசு பள்ளி மேலாண்மை குழு என்ற ஒரு குழுவை அமைத்துள்ளது.

அதில் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினர்கள் இந்த குழுவில் இருக்கப்போகிறார்கள்.

மேலும் பள்ளியை சுற்றி உள்ள அனைத்து குழந்தைகளையும் படிக்க வைப்பது, படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது இந்த குழுவின் முக்கியமான வேலை திட்டமாகும்.

அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சூழலையும் இந்த குழு கவனித்துக்கொள்ளும். மற்றும் பள்ளியின் கட்டிட வசதி, மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சரியான முறையில் வந்து சேர்ந்ததா என்பதையும் இந்த குழு கவனிப்பார்கள்.

நம்ம குழந்தைகளுக்கு நல்ல கல்வி சூழலும், வசதியும் கிடைக்க வேண்டுமென்றால் எல்லா அரசு பள்ளிகளில் நடக்கும் கல்வி மேலாண்மை குழுவில் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். சிறந்த பள்ளியும், சிறந்த கல்வியும் மாணவர்களின் உரிமை, அதற்கு துணை நிற்பதும் உறுதி செய்வதும் நமது கடமை’. இவ்வாறு சூர்யா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


Posted

in

by