விஜய் படத்தின் பழைய நண்பன் தளபதி 66 இல் சகோதரராக இணைகிறார்!
Vijay, Rashmika Mandanna, Sarathkumar, Shaam, Vamshi Paidipally, Prakash Raj, Thalapathy 66, Tamil Cinema 23-Apr-2022
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். அவர் நடித்து வரும் ‘தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்து தகவல் கசிந்துள்ளது.

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில், தில் ராஜூ தயாரிக்கும் படம் தளபதி 66. இப்படத்துக்கு தமன் இசைஅமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘தளபதி 66 திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், சகோதரர்களாக 90-களில் பிரபலமான இரண்டு ஹீரோக்களும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. முதற்கட்டமாக இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து, தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த இன்னுமொரு நடிகர் ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாம் 12பி, பாலா, இயற்கை போன்ற பல படங்களில் நடித்தது மட்டுமின்றி ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘தில்லாலங்கடி’ உள்பட பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும், விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஏற்கனவே நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.