‘விலங்குகளை போல் நடந்து கொள்ளுங்கள்’ நடிகையின் கருத்து
Adah sharma, Tamannaah 23-Apr-2022
ஈஷா யோக மையத்தின், மண் காப்போம் சார்பில் உலக பூமி தினமான நேற்றய தினம் தமிழகத்தில் பல்வேறுபட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மற்றும் நடிகர் பாலாஜி முருகதாஸ் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் அதா சர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘காடுகளில் விலங்குகள் குப்பையை கொட்டுவதில்லை மனிதர்கள் தான் குப்பையை கொட்டுகிறார்கள். தயவு செய்து விலங்குகள் போல் நடந்து கொள்ளுங்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்றும் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விலங்குகள் மண்ணில் இருந்தே தமது உணவை எடுத்துக்கொள்கிறது, அனால் நம் மண் இறந்து கொண்டு செல்கிறது. இதன் விளைவாக பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இந்த பூமி தினத்தில் மண்ணை அழியாமல் காப்போம், என் உறுதிமொழி எடுப்போம்’ என்று கூறியுள்ளார்.