பிரபல பாலிவுட் நடிகை திடீரென தனது காதலரை பிரேக்கப் செய்துள்ளார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகை தனது காதலரை பிரேக்கப் செய்துள்ளார்!

Kiara Advani, Sidharth Malhotra, M.S. Dhoni 23-Apr-2022

எம்.எஸ். தோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார்.

Kiara Advani, Sidharth Malhotra, M.S. Dhoni 23-Apr-2022

அப்படத்தின் மூலமாகவே கியாரா அத்வானி பாப்புலர் ஆனார். அவர் அதற்கு பிறகு மகேஷ் பாபுவுடன் ஜோடியாக ‘பரத் எனும் நான்’ படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு தென்னிந்தியாவிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தற்போது அவர் பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கியாரா அத்வானி பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார் என தகவல் தொடர்ந்து வந்தது. அவர்களும் நெருக்கமாகவே இருந்து வந்தனர். ஆனால் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

Kiara Advani, Sidharth Malhotra, M.S. Dhoni 23-Apr-2022

மேலும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யலாம் என கூட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.

அதற்கான கரணங்கள் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இவர்களின் பிரேக்கப் நியூஸ் தற்போது அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.