தி வாரியர் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

சிலம்பரசனின் புல்லட் சாங் 22 Apr 2022

The Warriorr, Devi Sri Prasad, Ram Pothineni, Silambarasan, Lingusamy, Bullet Song, Tamil Cinema 22nd Apr 2022 : லிங்குசாமி இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தமிழ் சினிமாவில் திரைப்பட தயாரிப்பாளரார் ஆவார். இவரது சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை ஆகியவை.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் தி வாரியர் என்பது லிங்குசாமி இயக்கும் அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமாகும். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இப்படத்தில் ராம் பொதினேனி, ஆதி பினிசெட்டி, கிருத்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா மற்றும் நதியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் “புல்லட் சாங்” இன்று தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியிடப்பட்டது. சிலம்பரசன் மற்றும் ஹரிப்ரியா பாடிய புல்லட் பாடல் வேற லெவலில் உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.