சிறிது காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் நடிகர்

ஓய்வு எடுக்கும் விஷ்ணு விஷால் 22 ஏப்ரல் 2022

Vishnu Vishal, Mohandas, Tamil Cinema 22nd Apr 2022 : 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு (சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது) மூலம் தனது சினிமாவை தொடங்கினார் விஷ்ணு விஷால். பின்னர் குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா,ராட்சசன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார்பட்டி சிங்கம், காடான், இன்று நேற்று நாளை போன்ற பல படங்களில் நடித்தார்.

அண்மையில் வெளிவந்த எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து மோகனதாஸ் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது. இவர் நடிப்புடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் ஒருவர்.

திடீரென சிறிது காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். இதற்குதான் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

by