விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி தொடர் நடிகர்கள்

Bhagya Lakshmi 21-04-2022

Bhagya Lakshmi 21-04-2022 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில், அதிகளவான ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி.

இத்தொடரில் அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்ந்து செல்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களான திவ்யா, மீனா மற்றும் மிலா ஆகியோர் நல்ல நண்பர்களாக பழகி வரும்நிலையில், எப்போதும் 3 பேரும் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அண்மையில் இவர்கள் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றபோது, எதிர்ப்பாராத விதமாக திருச்சிக்கு பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் மிலாவிற்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது, மற்ற இருவருக்கும் பாதிப்பு உண்டாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Bhagya Lakshmi 21-04-2022