“பீஸ்ட்” அபர்னா தாஸ் ‘BIGG BOSS’ புகழ் கவின் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளிவந்தது

Dada First Look 22nd Apr 2022

Kavin, Aparna Das, Dada , Bigg Boss Tamil, Tamil Cinema 22nd Apr 2022 : ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் எப்போதுமே சிறந்த கதைகள் கொண்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் புதிதாக உருவாகும் “டாடா” திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வாவின் முன்னாள் உதவியாளர் கணேஷ் கே. பாபு இயக்குகிறார். “டாடா” திரைப்படம் நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான காதல் கதையாக உருவாகிறது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவை எழில் அரசுவும், இசை இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினும் , எடிட்டிங் கதிரேஷ் அழகேசன் செய்கிறார்கள். தற்போது “டாடா” படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது.

Dada First Look 22nd Apr 2022

Posted

in

by