விதார்த்தின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது

Payanigal Gavanikkavum 22nd Apr 2022

Payanigal Gavanikkavum, Vidharth, Maasoom Shankar, Tamil Cinema 22nd Apr 2022 : விதார்த்தின் 25 ஆவது படம் கார்பன் இவ்வாண்டு ஜனவரி 13 இல் வெளிவந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் தயாரித்த இபடத்தை ஆர். ஸ்ரீனுவாசன் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணா, ஜி.மாரிமுத்து, அஜய் நட்ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். படத்தின் இசையமைப்பாளர் சாம் சி. எஸ், ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் மற்றும் படத்தொகுப்பை பிரவீன் கே.எல் செய்திருந்தனர்.

விதார்த்தின் அடுத்த படத்தை allinpictures தயாரிக்கின்றது. இதில் விதார்த்துடன் ஹீரோயின் மாசூம் ஷங்கர், கருணாகரன், லட்சுமிப்ரியா சந்திரமௌலி மற்றும் பலர் நடிக்கின்றனர். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கம் இப்படத்துக்கு ஒளிப்பதிவு எஸ்.பாண்டி குமார், இசை சாமந்த்.

விதார்த்தின் அடுத்த படமான பயணிகள் கவனிக்கவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Payanigal Gavanikkavum 22nd Apr 2022