விஜய் தேவரகொண்டாவின் புதிய படமான #VD11இல் சமந்தா இணைந்தார்

ஆரம்பமாகியது விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் #VD11

Vijay Deverakonda, Shiva Nirvana, Samantha, #VD11 21st Apr 2022 : தெலுங்கு திரையுலகில் ஹீரோ விஜய் தேவரகொண்டா சூப்பர் ஹிட் டைரக்டர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே போன்றோருடன் நடித்துள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

தற்போது விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் #VD11 ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பியூட்டி குயின் சமந்தா நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை இன்று படக்குழுவுடன் தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவை இதோ

VD11-2