மாநாடு 100 நாட்கள் கடந்த நிலையில் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

ஆரம்பிக்கிறது பத்து தல ஆட்டம்

Silambarasan, Priya Bhavani Shankar, Gautham Karthik, A R Rahman, Pathu Thala, Tamil Cinema 21st Apr 2021 : மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு அடுத்து நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட் வெளி வந்தது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் போன்றோர் நடிக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் .ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.

Pathu Thala 21st Apr 2021

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள சிம்பு, விரைவில் தனது அடுத்த படமான ‘பத்து தலை’ படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மப்தி’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் பத்து தல என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகும் பத்து தலை படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கவுள்ளார்.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே 6ஆம் தேதி கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.