இளையராஜாவுக்கு நன்றி கூறிய மோடி!
Narendra Modi, Ilaiyaraaja 20-Apr-2022
இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிற்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உட்பட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்” என பாராட்டி எழுதியிருந்தார்.

அதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர். அதற்கு விளக்கம் அளித்த இளையராஜா, தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்தபின் தான் அவ்வாறு எழுதியதாகவும், தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர்கள் தங்களது கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், தன்னை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் அழைத்து, தன்னை பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி என கூறியுள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.