ரஜினி வழியில் கமல் – படக்குழு எடுத்த முயற்சி!

கமல் படக்குழு ரஜினி பாணியில் தீவிர காட்டிய செயல்!

Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Shivani Narayanan, Arjun Das, Andrea Jeremiah, Lokesh Kanagaraj, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 20-Apr-2022

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Shivani Narayanan, Arjun Das, Andrea Jeremiah, Lokesh Kanagaraj 20-Apr-2022

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Shivani Narayanan, Arjun Das, Andrea Jeremiah, Lokesh Kanagaraj 20-Apr-2022

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதைப் போன்று கமலின் விக்ரம் படத்திற்கு ரயிலில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு செல்லும் ரயிலில் ‘விக்ரம்’ படத்தின் விளம்பர போஸ்டரை படக்குழு இடம்பெறச் செய்துள்ளது. ரஜினி பட பாணியில் கமல் படத்திற்கு எடுத்த முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Shivani Narayanan, Arjun Das, Andrea Jeremiah, Lokesh Kanagaraj 20-Apr-2022