வெற்றிமாறன் படத்தின் வெளியான புதிய தகவல்! Vetrimaaran

வெற்றிமாறன் இயக்கும் படம் பற்றிய தகவல்!

Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon, Vetrimaaran, Viduthalai 20-Apr-2022

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அசுரன் பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon, Vetrimaaran, Viduthalai 20-Apr-2022

‘ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட்’ சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்க்கும் இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் சேதுபதி கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Soori, Vijay Sethupathi, Gautham Vasudev Menon, Vetrimaaran, Viduthalai 20-Apr-2022

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன் படி ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.