பேட்மிட்டன் பிளேயர் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியா வீடியோ வைரல்!
PV Sindhu, Arabic Kuthu Song, Beast, Vijay 20-Apr-2022
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை புடைத்திருந்தது. மேலும் இப்பாடலை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலராலும் தங்களது நடனத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர்.
அந்த வகையில் தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அரபிக் குத்து பாடலுக்கு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.