கமல் எடுத்த முடிவில் திரைத்துறையினர் ஆச்சரியத்தில்!
Kamal Haasan, Fahadh, Vijay Sethupathi, Shivani Narayanan, Arjun Das, Andrea Jeremiah, Lokesh Kanagaraj 19-Apr-2022
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விகரம் படத்திற்காக கமல் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற மே மாதம் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.