ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படம்
N. T. Rama Rao Jr. 19-Apr-2022
தென்னிந்திய சினிமாவில் தற்போது பான் இந்தியா திரைப்படம் என்கின்ற ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பாகுபலி படத்தை தொடர்ந்து இந்த வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா, மற்றும் சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மேலும் கன்னடத்தில் இருந்து வெளியான கேஜிஎப் போன்ற படங்கள் பான் இந்தியா படமாக வெளியானதால் வசூலித்த லாபங்களை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அந்தவகையில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் தெலுங்கு தவிர்ந்து மற்றைய மொழி சினிமா ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து அவர் நடிக்கும் 30 வது படமும் பான் இந்திய படமாக வெளிவர உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் தரக்கூடிய வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தெருவித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா.