தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ள படக்குழு! வெளிவந்த புதிய தகவல் Dhanush

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்துள்ளது!

Dhanush, Priya Bhavani Shankar, Rashi Khanna, Nithya Menen, Mithran Jawahar, Thiruchitrambalam, Naane Varuven 19-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று சரிவை ஏற்படுத்தியது. அதன் பின்பு செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

Dhanush, Priya Bhavani Shankar, Rashi Khanna, Nithya Menen, Mithran Jawahar, Thiruchitrambalam, Naane Varuven 19-Apr-2022

இதனிடையே ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஜூலை மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தில்தனுஷுடன் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.