விஜய் சேதுபதிக்கு தொடர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநருடன் இணையும் சித்தார்த்! Siddharth

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்!

Siddharth, Arun Kumar, Vijay Sethupathi 19-Apr-2022

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

Siddharth, Arun Kumar, Vijay Sethupathi 19-Apr-2022

கடந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘அருவம்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சித்தார்த் அடுத்து புதிய படம் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Siddharth, Arun Kumar, Vijay Sethupathi 19-Apr-2022

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.