முன்னணி நடிகருடன் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் Nazriya

முன்னணி நடிகருடன் மீண்டும் தமிழில் இணையும் நஸ்ரியா!

Nazriya Nazim, Nani, Adade Sundara 18-Apr-2022

தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

Nazriya Nazim, Nani, Adade Sundara 18-Apr-2022

மேலும் 2018 இல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘கூடே’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘அண்டி சுந்தரானிகி’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தமிழில் ‘அடடே சுந்தரா’ மற்றும் மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் டீசர் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.