கர்ப்பமான வயிற்றோடு நடனமாடும் நடிகை ஸ்ரேயா! வைரலாகும் வீடியோ Shriya Saran

கர்ப்ப காலத்தில் நடனமாடிய ஸ்ரேயா!

Shriya Saran 18-Apr-2022

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. தமிழில் ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டார். அதன் பிறகு தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

Shriya Saran 18-Apr-2022

மேலும் சில காலம் மற்றய மொழிகளிலும் நடித்து வந்த நிலையில் அங்கும் பட வாய்ப்புகள் குறைவடைந்து செல்லுகையில், ஸ்ரேயா வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய குழந்தையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவருக்கு குழந்தை பிறந்ததே வெளி உலகுக்கு இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு அவர் கர்ப்பமாக இருந்தபோது நடனமாடி மகிழ்ச்சியாக இருந்த ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.