வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட சிபிராஜ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! Sibiraj

சிபிராஜ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sibiraj, Tanya Ravichandran, K. S. Ravikumar, Kishore, maayon 18-Apr-2022

சிபிராஜ் ‘கபடதாரி’ படத்திற்குப் பிறகு நடித்திருக்கும் படம் ‘மாயோன்’. கிஷோர் இயக்கியிருக்கும் இப்படத்தில் தன்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்’ சார்பாக அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Sibiraj, Tanya Ravichandran, K. S. Ravikumar, Kishore 18-Apr-2022

இது ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் நடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரீலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘மாயோன்’ படம் ஜூன் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்கள் படத்தை ரசிக்கும் வகையில் அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை உணரும் அனுபவத்தை வழங்கும் ஆடியோ விளக்கத்துடன் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


Posted

in

by