அருண் விஜய் படத்திற்கு விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கைக்கு படக்குழுவின் அறிவிப்பு! Arun Vijay

அருண் விஜய் படத்திற்கு விநியோகஸ்தர்கள் கோரிக்கையை படக்குழு செவிசாய்த்தது!

Arun Vijay, Priya Bhavani Shankar, Prakash Raj, Yogi Babu, Hari, Yaanai 16-Apr-2022

அதிரடியான விறுவிறுப்பான குடும்ப பாங்குடன் கூடிய படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பவர் இயக்குனர் ஹரி. தற்போது அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கியுள்ளார்.

Arun Vijay, Priya Bhavani Shankar, Prakash Raj, Yogi Babu, Hari, Yaanai 16-Apr-2022

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கே.ஜி.எஃப்’ படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, யானை படத்தை வரும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் யானை படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றி வைத்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் யானை படத்தின் தேதியை மாற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரிலீஸ் தேதியை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது.


Posted

in

by