AK 61 படத்தில் BMW பைக்கில் பறக்க இருக்கும் அஜித்! இணையத்தில் வீடியோ வைரல் AK 61

AK 61 படத்துக்காக அஜித்தின் ஆஸ்தான பைக் BMW இறங்குகிறது!

Ajith Kumar, Ajith, Kavin, Rakul Preet Singh, Vinoth H, Boney Kapoor, AK 61, Tamil Cinema 16-Apr-2022

தல அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச். வினோத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

Ajith Kumar, Ajith, Kavin, Rakul Preet Singh, Vinoth H, Boney Kapoor, AK 61, Tamil Cinema 16-Apr-2022

இப்படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படங்கள் வெளியாகியிருந்த நிலையில், தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் AK 61 மூன்றாவது படமாக உருவாக இருக்கிறது.

‘AK 61’ படம் ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சென்னை மவுண்ட் ரோடு போன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது ஆஸ்தான வாகனமான BMW பைக்கை முறுக்கும் 5 விநாடி கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.