பீஸ்ட் பட 2 நாள் வசூலை ஒரே நாளில் அடித்து நொறுக்கிய கேஜிஎப் 2! யாஷ் வேட்டை KGF 2

பீஸ்ட் பட வசூலை ஒரே நாளில் ஓரம் கட்டிய கேஜிஎப் 2!

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 15-Apr-2022

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில், தற்போது யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அதாவது நேற்று வெளியாகி இருந்தது.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 15-Apr-2022

கேஜிஎப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2 ஆம் பாகத்திற்கு பெரியஅளவில் எதிர்பார்ப்பு இருந்தது, இதனிடையே இவ்விடத்தை எடுத்துக் கொண்டாலும் புக்கிங் அதிக அளவில் நடைபெற்று வந்தன.

மேலும் கர்நாடகாவை தாண்டி வட மாநிலம் மற்றும் கேரளா போன்ற இடங்களில் பீஸ்ட்டை விட கேஜிஎப் 2 படத்திற்கு தான் அதிக வரவேற்பு என கூறப்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2 நாள் முடிவில் ரூபா 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, ஆனால் யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூபா 134.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் இருந்து வெளியாக ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.