கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்! குழப்பத்தில் ரசிகர்கள் Karthi

கார்த்தியுடன் போட்டியிடும் சிவகார்த்திகேயன் படம்!

Sivakarthikeyan, Karthi,Rashi Khanna, G. V. Prakash Kumar, P.S. Mithran, SK 20, Sardar 14-Apr-2022

நடிகர் கார்த்தி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தில் நடித்து முடித்துள்ளதைத் தொடர்ந்து பி.எஸ் மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Sivakarthikeyan, Karthi,Rashi Khanna, G. V. Prakash Kumar, P.S. Mithran, SK 20, Sardar 14-Apr-2022

இதனிடையே சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளதை அடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்தியின் ‘சர்தார்’ படமும் சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 20’ படமும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஒரே தேதியில் வெளியாகும் முன்னணி ஹீரோ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த இரு படங்களும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்ச்சாகம் அடைந்துள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.