அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சமில்லை – K.G.F Chapter 2 விமர்சனம்

K.G.F Chapter 2 Movie Review 14th Apr 2022

KGF Chapter 2, Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Prashanth Neel, Tamil Cinema 14th Apr 2022 : முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக கேஜிஎப் 2 வெளிவந்துள்ளது. இந்த படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கி உள்ளார். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளனர்.

முதல் பாகத்தில் வில்லன் கருடனைக் கொன்றதன் மூலம் தங்க சுரங்கத்தின் அதிபதியாகிறார் யாஷ் ஹீரோ. அதன் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப் பில் வாழும் மக்களை நன்றாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் ஹீரோ யாஷ். இறந்துவிட்டதாக கூறப்படும் சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் சகாக்களுடன் யாஷ் உடன் மோத வருகிறார். யாஷ், சஞ்சய் தத் இடையான யுத்தத்தில் கே.ஜி.எஃப் யார் வசமாகிறது என்பதே படத்தின் மீதி.

ஹீரோ யாஷ் சிங்கள் ஆளாக படத்தை கொண்டு செல்கிறார். வெறித்தனமான ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டுகிறார். இவரது ஆக்ஷன் படத்திற்கு பிளஸ். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் அரசியல்தியான ரவினா ஓரளவு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சஞ்சய் தத் வில்லன் நடிப்பை அவ்வளவாக இல்லை. முதல் பாகத்தை விட பல மடங்கு மாஸாக படத்தை எடுத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் திரைக்கதை புதிதாக குறிப்பிடப்படியாக ஏதும் காணவில்லை.

காட்சி பிரம்மாண்டம் அனல் தெறிக்கும் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமில்லை. படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடா கே.ஜி.எஃப் சுரங்கம் சண்டைக்காட்சிகள் போன்றவற்றை சிறப்பாக காட்டியிருக்கிறார். கே.ஜி.எஃப் சண்டைக்காட்சிகள் நிறைந்த படம்.

Exit mobile version