இறுதிக்கட்டத்தை நெருங்கும் சிம்பு படம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் Simbu

சிம்பு படம் முடிவின் இறுதி கட்டத்தில்

Simbu, STR, Siddhi Idnani, Gautham Vasudev Menon, Vendhu Thanindhathu Kaadu, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate 13-Apr-2022

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Simbu, STR, Siddhi Idnani, Gautham Vasudev Menon, Vendhu Thanindhathu Kaadu 13-Apr-2022

இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியின் 3 வது படமாக தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழு கூறப்படுகிறது.