பீஸ்ட் படத்தை பார்த்து கோபமான மதுரை ரசிகர்கள் தியேட்டரையே கொளுத்திய வைரல் வீடியோ

எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த பீஸ்ட்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ளது ‘பீஸ்ட்’ படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான மற்றும் கவலைக்குரிய விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

இந்நிலையில் பீஸ்ட் ரசிகர்களைத் தாண்டி பொது மக்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை, எப்போதும் விஜய் படங்கள் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும், இந்தபடம் நேற்றுக்கூட பல காட்சிகள் புக்கிங் புல் ஆகவில்லை.

அதோடு படத்தை பார்த்த அனைவரின் கருத்தும், என்ன நெல்சன், ஏன் இப்படி என்பது தான், நெல்சனிடம் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது ஒரு நல்ல டார்க் காமெடி படத்தில் விஜய் எப்படி வருவார் என்பது தான். அனால் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவே காண்பிக்க பட்டுள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் பிரபல திரையரங்கு ஒன்றில் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற விரக்தியில் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்தின் ஸ்கிரீனை தீயீட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.