இலங்கையில் பொருளாதார பிரச்சினைகள் மத்தியில் ‘பீஸ்ட்’ ஃபயர்! Beast movie

பொருளாதார பிரச்சினைக்கிடையில் பீஸ்ட் படத்துக்கு குவியும் ரசிகர்கள்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ளது ‘பீஸ்ட்’ படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான மற்றும் கவலைக்குரிய விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது. இது விஜய்க்கு 65 வது படமாக அமைந்திருப்பதோடு நெல்சன் திலீப்குமாருக்கு 3 வது படம் ஆகும்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

இந்நிலையில் பீஸ்ட் படம் இலங்கையில் கொழும்பு நகரில் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விஜய்யின் பீஸ்ட் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 850 முதல் ரூ. 3000 வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் உள்ள பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் கூட்டம் ஒன்றுதிரண்டு வீதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் இவ்வாறு பீஸ்ட் படத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது.