பழைய கதையை தூசி தட்டி பில்டப் கொடுத்த நெல்சன் – Beast விமர்சனம்

Beast Movie Review 13th Apr 2022

Vijay, Pooja Hegde, Beast, Beast Mode ON, Tamil Cinema 13th Apr 2022 : விடிவி கணேஷ் நடத்தும் அலுவலகத்தில் வேலை செய்கிறார் ஹீரோ விஜய். விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு வரும் தீவிரவாதிகள் பொதுமக்களை கைதிகளாக பிடித்து வைத்து அவர்களை விடுவிக்க செய்வதாயின் சிறையில் உள்ள தீவிரவாதி ஒருவரை விடுதலை செய்யச் சொல்கிறார்கள். முன்னாள் ராணுவ வீரரான விஜய், தீவிரவாதியை விடுதலை செய்யாமல் மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை ஒழித்து அங்குள்ள பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகளிலும் நடனக் காட்சிகளிலும் வழமை போன்று திறமையை காண்பித்து இருக்கிறார். ஹீரோயின் பூஜா ஹெக்டே, தனது பங்குக்கு நடித்திருக்கிறார். அதிகாரியாக வரும் செல்வராகவன் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்கு ஓரளவு சுவாரஸ்யம் கொடுப்பவர் காமெடியன் விடிவி கணேஷ். சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார். யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்து சென்றிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை.

பல மொழிகளில் வந்த பல படங்களை நினைவு படுத்துகிறார் இயக்குனர் நெல்சன். இவர் அனிருத்துடன் சேர்ந்து காலப்போக்கில் காப்பியடிப்பதில் அனிருத்தாகவே மாறிவிடுவர் போலும். வழக்கமான திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து கொடுத்த நெல்சன் லாஜிக் என்கிற விஷயத்தை மறந்து விட்டார் போலத் தோன்றுகிறது. அனிருத் இசையில் காப்பியடித்த பாடல்கள் அனைத்தும் ஹிட். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பார்க்கும் போது மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. பீஸ்ட் என்றால் விஜய் அவ்வளவு தான்.

Beast Movie Review 13th Apr 2022