ரசிகர்களை ஏமாற்றிய பீஸ்ட்-என்ன நெல்சன் இப்படி பண்ணிடீங்களே? Beast public Review

எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த பீஸ்ட்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளிவந்துள்ளது ‘பீஸ்ட்’ படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான மற்றும் கவலைக்குரிய விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast, Tamil Cinema 13-Apr-2022

இந்நிலையில் பீஸ்ட் ரசிகர்களைத் தாண்டி பொது மக்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை, எப்போதும் விஜய் படங்கள் நன்றாக இருக்கின்றதோ இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும், இந்தபடம் நேற்றுக்கூட பல காட்சிகள் புக்கிங் புல் ஆகவில்லை.

அதோடு படத்தை பார்த்த அனைவரின் கருத்தும், என்ன நெல்சன், ஏன் இப்படி என்பது தான், நெல்சனிடம் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது ஒரு நல்ல டார்க் காமெடி படத்தில் விஜய் எப்படி வருவார் என்பது தான். அனால் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவே காண்பிக்க பட்டுள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களே சோகத்தில் இருக்கும் அளவிற்கு பல காட்சிகள் உள்ளது, விஜய் இருந்தால் மட்டும் போது, படத்தில் விஜய் என்ன செய்கிறார் என்ற ஆவலுடன் தானே ரசிகர்கள் படத்தை பார்க்க வருவார்கள், அந்த வகையில் படத்தில் பெரியளவில் ஏமாற்றம் மட்டுமே ரசிகர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. இது விஜய் படம் அல்ல நெல்சன் படம் என்றே கூறுகிறார்கள்.