ஜெயம் ரவி படத்துக்கு நடிகை கேட்ட சம்பளம்
Jayam Ravi, Priya Bhavani Shankar, N Kalyana Krishnan, Taapsee Pannu, Arjun, Ahmed, Jana Gana Mana, Agilan 12-Apr-2022
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருபவர் ஜெயம் ரவி. அந்தவகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்து, தற்போது ‘அகிலன்’ மற்றும் ‘ஜன கன மன’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இயக்குநர் அகமது இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி-நயன்தாரா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழில் உச்ச நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் மற்ற நடிகைகளை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.
நயன்தாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடிக்க ரூபா 3 கோடி வாங்கினார். அதன் பின் ரூபா 5 கோடியாக மாறிய நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவி படத்தில் நடிக்க ரூபா 10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழு எந்தவிதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.