ஆட்டோ ஓட்டுனரான சிம்பு-வெளியான புதிய ட்ரெண்டிங் வீடியோ! Simbu

சிம்புவின் ட்ரெண்டிங் வீடியோ வைரல்!

Simbu, STR, Corona Kumar, Pathu Thala, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate Tamil 12-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. கடைசியாக அவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகர் சிம்பு உடல்எடை குறைத்ததும் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். மிகவும் ஆக்டீவாக படங்கள் நடித்து வருகிறார்.

Simbu, STR, Corona Kumar, Pathu Thala 12-Apr-2022

மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி என பிஸியாகவே பணியாற்றி வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, அதில் பாலாஜி முருகதாஸ் வெற்றிப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்புவின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதில் அவர் ஆட்டோ ஓட்டுபவர் போல் உடை அணிந்து ஆட்டோவில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இது எந்த படத்திற்கான படப்பிடிப்பு என அறிந்துகொள்ள முடியவில்லை.