Elli AvrRam 12th Apr 2022
Selvaraghavan, Dhanush, Elli AvrRam, Naane Varuven, Tamil Cinema 12th Apr 2022 : பிரபல இயக்குனர் செல்வராகவன் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர். 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவை இவரது படங்கள். அவர் அவரது சகோதரரான நடிகர் தனுஷுடன் இணைந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை தந்திருந்தார்.
சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் மீண்டும் உருவாகும் புதிய படம் ‘நானே வருவேன்’. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு நடிகை ‘எல்லி அவ்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ‘நானே வருவேன்’ பட ஷூட்டிங்கில் எடுத்த படங்களை தனது சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.