AK-61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! Ajith Kumar

அஜித்துக்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி!

Ajith, Ajith Kumar, Rakul Preet Singh, H. Vinoth, Boney Kapoor, AK 61 12-Apr-2022

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.

Ajith, Ajith Kumar, Rakul Preet Singh, H. Vinoth, Boney Kapoor, AK 61 12-Apr-2022

எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும், AK 61 படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்றும் இப்படத்தில் நடிகர் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜை நேற்றைய தினம் (11.04.2022) போடப்பட்டது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது பாலிவுட் நடிகை தபு என்று கூறப்பட்டு வந்த நிலையில், இதனை முற்றிலும் படக்குழு மறுத்துள்ளது.

Ajith, Ajith Kumar, Rakul Preet Singh, H. Vinoth, Boney Kapoor, AK 61 12-Apr-2022

இந்நிலையில், AK 61 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது நடிகை ரகுல் ப்ரீத் சிங் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.