அரசியல் பற்றி விஜய் பகிர்ந்து கொண்டது!
Vijay, Thalapathy, Nelson, Thalapathy 66, Beast 11-Apr-2022
சன் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெறும். வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். ஏன் என்றால் அவ்விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கான குட்டி ஸ்டோரியுடன் அரசியலையும் கலந்து சொல்லிவிட்டு போவார்.
அதை தொடர்ந்து அடுத்தநாள் அவரின் பேச்சுக்கள் பெரும் விமர்சனங்களை உண்டாக்கும். ஆனால் அப்படியான நிகழ்வு பீஸ்ட் படத்திற்கு நடக்காத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சியானா சன் டிவி யில் விஜய் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக காணப்படுகிறது.

அது தொடர்பாக விஜய் அளித்த பேட்டியில்,”எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கோவில், தர்கா, தேவாலயம் என அனைத்திற்கும் செல்வேன். எனக்கு எல்லாமே ஒண்ணுதான் என்றார். அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர். கடவுள் கண்களுக்கு தெரியமாட்டார். அப்பா கண்களுக்கு தெரிவார். இதுதான் அப்பாவுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகன் சஞ்சய் குறித்து பேசிய விஜய், “அவர் நடிக்க போகிறாரா,இல்லை கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. ஒரு நாள் பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் சஞ்சய்க்காக கதை சொல்ல வந்தார். அந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது. இத அவன் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். ஆனால் இதை அவன் கிட்ட சொன்னதற்கு இப்போது வேண்டாம் இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான். நானும் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.